பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிக்காரர்கள் ; கோடீஸ்வர யோகம் இவர்களுக்குத்தான்
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் பாபா வங்காதான். உலகின் வரலாற்றை மாற்றிய பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார்.
குறிப்பாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரகங்களின் அமைப்பானது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தெரியுமா?
ரிஷபம் : பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் முதலீடுகள் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்களின் கடின உழைப்பிற்கான பெரும் பலன்களை இப்போது அடையலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இப்போது அலுவலகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கலாம். அதேசமயம், வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.
சிம்மம் : பாபா வங்காவின் கணிப்பின்படி, இந்த மாதத்தில் அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது மட்டுமின்றி பதவி உயர்வு, புதிய தொழில் முயற்சிஆகியவை அவர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களைச் செல்வந்தராக மாற்றக்கூடும்.
விருச்சிகம் : இந்த மாதத்தில் அவர்கள் செய்யும் முதலீடுகள் அவர்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுக்கக்கூடும். இந்தக் காலம் அவர்களை நிதிரீதியாக வலிமைமிக்கவராக மாற்றக்கூடும். இந்த மாதம் நீங்கள் ஒரு புதிய வாகனம் வாங்கலாம் அல்லது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு முக்கியமான நபரின் நட்பைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான காலமாக இருக்கும்.