தமிழக மக்கள் ஏற்படுத்திய பெரும் மாற்றம்; விஜய்யின் "ட்விஸ்ட்" அரசியல் நகர்வுகள்
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெரும் கட்சிகள் துவண்டு போயுள்ளன .
108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில் உள்ளது.

முதல்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி
இந்த சூழலில், தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகியுள்ளன. தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகள் முன்வரக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது.
குறிப்பாக, 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில், இக்கட்சிகள் விஜய்யின் தலைமைக்கு தோள் கொடுக்க தயாராக இருப்பதாக கருதப்படுகிறது.
அதேவேளையில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிலையான ஒரு ஆட்சியை வழங்க தவெக-வுடன் கைகோர்க்க தயாராக இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
விஜய்யின் இந்த "ட்விஸ்ட்" அரசியல் நகர்வுகள், அனுபவம் வாய்ந்த தலைவர்களை உள்ளடக்கிய ஒரு பன்முகத்தன்மை கொண்ட அமைச்சரவையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பியதன் விளைவாக, இத்தனை கட்சிகளும் இணைந்து ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளன