கட்சி தாவிவிடாதீர்கள்; வேட்பாளர்களுக்கு விஜய் கண்டிக்ஷன்!
வாக்கு எண்ணிக்கை நாளில் அவதானமாக இருக்குமாறு தவெக தலைவர் விஜய், தனது வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கடந்த 23-ஆம் திகதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
தேர்தலுக்கு புதிய வரவான நடிகர் விஜய் இன் தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியை தவிர ஏனைய 233 தொகுதிகளிலும் களம் கண்டது. இந்த நிலையில், த.வெ.க. வேட்பாளர்களை இன்று (30) சென்னை வருமாறு, அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.

கட்சி தாவிவிடாதீர்கள்....
வரும்போது, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் அலுவலர் வழங்கிய 17 சி படிவத்தையும் எடுத்து வருமாறு கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் இன்று மதியம் த.வெ.க. வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.
அப்போது, "தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். வேட்பாளர்களாக நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன். இதுவரை நன்றாக பணிபுரிந்துள்ளீர்கள்.
வாக்கு எண்ணிக்கை நாளில் கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.
அதாவது, ஆளுங்கட்சியும் (தி.மு.க.), ஆண்ட கட்சியும் (அ.தி.மு.க.) பணம் கொடுத்து அழைத்தால், கட்சி தாவிவிடாதீர்கள் என்பதைத்தான் விஜய் அவ்வாறு கூறியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.