ஆபாச மெசேஜ் ;த.வெ.க எம்.எல்.ஏ சிறையில் அடைப்பு
பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் கள்ளக்குறிச்சி மகளிர் நிலைய காவல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.
ஒருபக்கம் புகாரளித்த மாவட்ட பெண் கலெக்டர் மற்றும் அவரின் கணவரிடமும் விசாரணை அதிகாரி திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார். அதன்பின் நேற்று மாலை தவெக எம்.எல்.ஏ வை போலீசார் கைது செய்தனர்.
அதன்பின் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர் உடல் பரிசோதனை செய்யப்பட்டபின் நீதிபதியிடம் அவரை ஆஜர்படுத்தினர்.
அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதை எடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் தவெக எம்.எல்.ஏ கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.