வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா;பிரதமர் மோடியின் பதிவு வைரல்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் இன்று (28) தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ”வெற்றிவேல் முருகனுக்கு” அரோகரா பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” எனத் தமிழில் பதிவிட்டுள்ள அவர், அதே வாசகத்தை ஹிந்தி மொழியிலும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பதிவு சர்வதேச அளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளதுடன், இந்திய ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியுள்ளது.
மலை அடிவாரத்தில் CRPF வீரர்கள் குவிப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போது சி.ஆர்.பி.எப் வீரர்கள் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஏராளமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிலர் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்றும் இடத்தையும் பார்வையிட்டனர்.
ஒருபக்கம் தமிழக காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் கோயில் மலை அடிவாரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது