விபத்தில் 15 வயது மாணவன் பலி
கம்பளை – புசல்லாவ பிரதான வீதியின் மாரா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நகரிலிருந்து நான்கு பேரை ஏற்றிக்கொண்டு வாடகை சேவையில் ஈடுபட்டிருந்த முச்சக்கரவண்டி மீது, புசல்லாவ பகுதியிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில், கம்பளை ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, சிகிச்சை பெற்று வந்த 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய சிற்றூந்து சாரதி கம்பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.