சிறைச்சாலைகளில் பெண் கைதிகளுக்கு பாரிய பிரச்சினை
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் பெண் கைதிகளுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு துவாய்கள் இல்லாமை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை. இல்லையென்றால் மிக விரைவில் இது பாரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று(27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு இந்தப் பிரச்சினையை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா, பெண் கைதிகளுக்காகச் சுகாதார பாதுகாப்பு துவாய்களை வழங்கும் இயந்திரங்களை நிறுவுமாறு முன்மொழிந்தார்.
அரச சார்பற்ற நிறுவனமொன்று கைதிகளுக்குச்சுகாதார பாதுகாப்பு துவாய்க (நெப்கின்களை) வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், அது போதுமானதாக இல்லைஇஎன அவர் தெரிவித்தார்.
இதனை அலட்சியப்படுத்தினால் பாரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதால், நாம் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறைக்கைதிகளைப் புனர்வாழ்வளிப்பதற்காக எதுவும் செய்யப்படாததால், 'சிறைக்கைதிகளும் மனிதர்களே' என்ற வாசகம் வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
சிறைச்சாலை நெரிசலுக்குத் தீர்வாக வீட்டுக் காவலில் வைக்கும் முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பாராட்டுக்குரியது என அவர் கூறினார்.