யாழ் சிறுவன் அஜிந்தன் அபிநயன் உயிரை பறித்த பாரவூர்தி
யாழ் சத்திரச் சந்தியில் இன்று காலை நடைபெற்ற விபத்தில் அஜிந்தன் அபிநயன் எனும் சிறுவன் ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்த சிறுவன் வீதியில் விழுந்து நிலையில் பாரவூர்தியின் சில்லுக்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.
விபத்து சம்பவத்தையடுத்து கோபமடைந்த அப்பகுதியில் நின்ற மக்கள் லொறியின் கண்ணாடியை அடித்து நொருக்கினர். விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி
யாழில் இன்றுகாலை பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்



