சனி பகவானால் இவர்களின் தலைவிதியே மாறப்போகிறது! யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஜோதிட சாஸ்திரத்தில், நீதி அரசர் என வர்ணிக்கப்படும் சனி பகவானின் ஒவ்வொரு பெயர்ச்சியும், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில், 2026-ம் ஆண்டு நிகழவிருக்கும் சனிப் பெயர்ச்சி, சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கும் காலகட்டம், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு மிக முக்கியமான படிப்பினைகளையும், பெரிய மாற்றங்களையும் கொண்டு வரப் போகிறது.

காத்திருக்கும் பெரிய மாற்றங்கள்
அவை நன்மைகளாக இருந்தாலும் சரி, தீமைகளாக இருந்தாலும் சரி, சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். எந்த 3 ராசிகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு, 2026ம் ஆண்டு சனியின் சஞ்சாரம் ஒரு கலவையான பலன்களையே தரும். இது ஒரு சுயபரிசோதனைக்கான ஆண்டாக அமையும். உங்கள் கடின உழைப்பு மற்றும் பொறுமைக்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும், ஆனால் அதற்காக நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, நிதானமான வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம்.

கும்பம் : கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு, 2026-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மிகவும் செல்வாக்கு மிக்கதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத பெரிய மாற்றங்கள் நிகழலாம். சனியின் செல்வாக்கு முன்பை விட வலுவாக இருப்பதால், நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அதில் உங்கள் முழு மனதையும் செலுத்தி, மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

மீனம் : 2026-ம் ஆண்டில், சனி பகவான் உங்கள் ராசியான மீன ராசியிலேயே சஞ்சரிப்பார். இது ஏழரை சனியின் தாக்கத்தை உங்களுக்கு முழுமையாகக் கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில், வாழ்க்கையை மிக ஆழமாகவும், நெருக்கமாகவும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்கள் பொறுப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும்.
