நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கையில் நடந்த குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு, அண்மையில் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நேற்று (3) கோட்டை நீதவான் முன்னிலையில் தெரிவித்தது.
இந்தியாவினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

அண்மையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் தொடர்பிலும் இந்த மூன்று சந்தேக நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்வரும் தவணையில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.