முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார்.
நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார். அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.