தமிழர் பகுதியில் திடுக்கிடும் சம்பவம்... சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்!
திருகோணமலையில் உள்ள ஈச்சலம்பற்று - இறங்குதுறை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (03) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதேவேளை, கொலையை செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.