யாழில் உயிரிழந்த தாய்...நடந்த பாரிய மோசடி! வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மூதாட்டியின் சொத்துக்களை சட்டவிரோதமாக பெற்று இருக்கலாம் என சந்தேகமடைந்த நிலையிலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். மானிப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த மூதாட்டி திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் மகன் வெளிநாட்டில் இருந்து, வைத்தியசாலை பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” தாயிடம் இருந்து சிலர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை எழுதி வாங்கியுள்ளார்” என எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
அது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, பணிப்பாளர் சட்ட வைத்திய அதிகாரிக்கு இந்த விடயத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!
இதன்போது, குறித்த மூதாட்டியின் கை பெருவிரலில் மை அடையாளம் காணப்பட்டுள்ளது, அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் உயிரிழந்த மூதாட்டியை பராமரித்தவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தாம் வைத்தியசாலையில் பெண்ணை அனுமதிக்கும் போது பெருவிரலில் மை அடையாளம் இல்லை எனவும், பின்னர் எப்படி வந்தது என தமக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, வெளிநாட்டில் வசிக்கும் உயிரிழந்த பெண்ணின் மகன் வைத்தியசாலைக்கு நேரில் வருகை தந்து பெண்ணை அடையாளம் காட்டிய பின்னரே உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அது வரை சடலம் பிரேத அறையில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.