திருகோணமலை புத்தர் சிலை; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது
திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள், பெப்ரவரி 3ஆம் திகதியன்று நிராக்கப்பட்டது. அதனை அடுத்தே, பிணைமனுக்கோரிக்கை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், திங்கட்கிழமை (09) அன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும், பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.