நேர்த்திக்கடனுக்காக சென்ற இளம் தாய்; சாரதியின் மோசமான செயலால் புரட்டிவிடப்பட்ட முச்சக்கரவண்டி
பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது.
ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை, முச்சக்கர வண்டிக்குள் வைத்து நேற்று (19) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த போது, அந்த பெண் குரல் எழுப்பியமையால், முச்சக்கரவண்டியை அதன் சாரதி வேண்டுமென்றே புரட்டி விட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி விபத்து
சம்பவத்தின் போது அந்த பெண்ணும், சந்தேகநபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இளம் தாய் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான தேவாலயத்துக்குச் சென்று, முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பின் சக்கரத்தில் ஏதோ சத்தம் கேட்பதாக தெரிவித்த சாரதி, முச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, பின்பக்க ஆசனத்துக்கு சென்று குறித்த பெண்ணை துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் குரல் எழுப்பிய போது சத்தம் கேட்ட திசையை நோக்கி ஒரு சிலர் ஓடி வந்த நிலையில் அவர்களை கண்ட சாரதி, முச்சக்கரவண்டியை இயக்கி, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்து தான், பாய்வதற்கு முயன்றபோதும், அவ்வாறு செய்தால், முச்சக்கரவண்டி புரண்டு விடும் என்று தெரிவித்துள்ள சாரதி அந்த முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே விபத்துக்கு உள்ளாகி விட்டாகவும் பெண்ணின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.