இன்று பங்குனி தேய்பிறை சஷ்டி; முருகனின் அருள் கிடைக்க இப்படி வழிபடுங்க
பங்குனி மாதம் என்பதே முருகப்பெருமானுக்கு உகந்த மாதம் தான். அப்படிப்பட்ட மாதத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி என்பது வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.
முருகப் பெருமானே குருவாக அவதரித்தவர் என்பதால் குருவிற்கு உரிய கிழமையில் சஷ்டி வருவது சற்று கூடுதல் விசேஷமான ஒன்று.
பங்குனி தேய்பிறை சஷ்டி வழிபாடு
அன்றைய நாளில் நாம் மிகவும் எளிமையான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் கூட முருகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்துவிடும்.
இந்த வழிபாட்டை மார்ச் மாதம் 20ஆம் தேதி காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 7:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்குள் செய்யலாம். வீட்டில் முருகப்பெருமானின் வேல், சிலை இருக்கும் பட்சத்தில் அதற்கு இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும். வேறு எந்த பொருள்களை வைத்து அபிஷேகம் செய்யாவிட்டாலும் வெறும் இளநீரை மட்டுமாவது வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
வீட்டில் வேல், சிலை இல்லை என்றால் முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கு நெய்வேத்தியமாக இளநீரை வைத்து விடுங்கள். அபிஷேகம் செய்து முடித்த பிறகு சந்தனம் குங்குமம் வைத்து முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வரளி மலர்களை பயன்படுத்தி பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இந்த அர்ச்சனையை செய்து முடித்த பிறகு முருகப்பெருமானுக்குரிய சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும். படிக்கத் தெரிந்தவர்கள் படிக்கலாம், படிக்கத் தெரியாதவர்கள் கேட்கவாவது செய்ய வேண்டும். அவ்வாறு சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது அல்லது கேட்கும்பொழுது கையில் கருப்பு கொண்டை கடலையை வைத்துக் கொண்டு படிக்க வேண்டும் கேட்க வேண்டும்.
வியாழக்கிழமை என்பதால் அது குரு பகவானுக்குரிய கிழமை. குருபகவானுக்கு உகந்த தானியமாக கருப்பு கொண்டை கடலை திகழ்கிறது என்பதால் நாளைய தினத்தில் முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதியும் சேர்ந்து வருவதால் இந்த கருப்பு கொண்டை கடலையை கையில் வைத்துக்கொண்டு சஷ்டி கவசத்தை பாராயணம் செய்பவர்களுக்கு முருகப்பெருமானே குருவாக வந்த அருள் புரிவார் என்று கூறப்படுகிறது. படித்து முடித்த பிறகு இந்த கொண்டைக்கடலையை வேகவைத்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ணலாம்.