கொரோனாவால் யாழில் உயிரிழந்த பிரபல வர்த்தகருக்கு அஞ்சலி!
கொரோனா தொற்று காரணமாக நேற்று காலமான யாழ். மானிப்பாயைச் சேர்ந்த சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரபல வர்த்தகருமான சு.சிவகுமாரன் அவருக்கு அஞ்சலி செலுப்பட்டுள்ளது.
நேற்று (21) ஞாயிற்றுகிழமை யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத் தர்மகர்த்தா சபையின் பொருளாளராகப் பெரும் பணிகள் பலவும் செய்ததுடன் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் மூலமாகப் பலருக்கும் வேலைவாய்ப்புக் கொடுத்து அவர்களின் குடும்பங்களை வாழவைத்துள்ளார்.
இதேவேளை, மானிப்பாயில் பல்வேறு சமூக சேவைகளையும் மேற்கொண்டதுடன், உதவிகள் கேட்பவர்களுக்கு இல்லையெனாது ஈந்திட்ட வள்ளலாகவும் விளங்குகினார்.
இந்நிலையில், இன்று, (22) திங்கட்கிழமை அவரது உறவினர்கள் மற்றும் யாழ்.வர்த்தகர்களினால் மானிப்பாயில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.