விடுமுறையில் வந்த இராணுவச் சிப்பாய் செய்த மோசமான செயல் ; அடுத்தடுத்து சிக்கிய 09 பேர்
போதைப்பொருள் சுற்றிவளைப்பு சிறப்பு நடவடிக்கையொன்றில், போதைப்பொருள் வைத்திருந்த இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலகொல்ல, கந்தேகெடிய, தலதென, மீகஹகிவுல, அக்கலவுல்பொத்த மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 20-43 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயினுடன் கைது
இச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான இராணுவச் சிப்பாய் முதலில் பலகொல்ல பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்த ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே ஏனையவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் பணியிலிருந்து விடுமுறையில் வந்தபோது குறித்த சிப்பாய் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.