யாழில் திருநங்கையின் உருக்கமான கோரிக்கை; பிளீஸ் இப்படி செய்யாதீர்கள்!
திருநங்கைகளை மனதளவில் புண்படுத்தும் நடவடிக்கைளை செய்ய வேண்டாம் என யாழ் திருநங்கையான ஷாலினி உருக்கமான கோரிக்கையொன்றை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட ஷாலினி தற்போது காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நிலையில் தான் சந்திக்கும் விடயங்கள் தொடர்பில் அவர் மனவருத்தத்துடன் கூறியுள்ளார்.
கேலி பேசும் ஆண்கள்
இது தொடர்பில் அவர் கூறுகையில், எனக்கு பெற்றோர் இல்லை. 12 வயதிலேயே நான் ஒரு திருநங்கை என்று உணர்ந்தேன். உறவினர்களுடனே நான் இருந்து வந்த நிலையில் நான் ஒரு திருநங்கை என்று உணர்ந்த பின்னர் உறவினர்கள் என்னை விரட்டிவிட்டனர்.
தற்போது நான் காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு ஹோட்டலொன்றில் சுத்தப்படுத்தல் வேலையை செய்து வருகின்றேன்.
எனினும் நாளாந்தம் நான் வீதியில் சென்று வரும் போது என்னை பலரும் வித்தியாசமாக பார்க்கின்றனர். அதில் சிலர் கேலி செய்கின்றனர். பெண்கள் என்னை மதிப்பதுடன் எனக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனினும் ஆண்களே புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் திரு நங்கைகள் நிறைய பேர் இருந்தும் அவர்கள் தம்மை வெளிகாட்டிக் கொள்வதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முழுமையாக தான் பெண்ணாக மாறுவதற்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் எனினும் தனக்கு அதற்கான உதவிகளை வழங்க யாரும் இல்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.