நீண்டகால வலிகளின் பின்னர் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு கிடைத்த பேரதிஸ்டம்!
உலகளாவிய ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களான இலங்கை தமிழ் நடேசன் மற்றும் பிரியா தம்பதியின் வதிவிட உரிமை குறித்த புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சாதகமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அவுஸ்திர்ரேலியாவில் புதிய அரசாங்கம் இன்று அறிவித்த இந்த முடிவின் படி, நடேசன் மற்றும் பிரியா தம்பதி மற்றும் அவர்களின் பிள்ளைகள் மீண்டும் குயின்ஸ்லாந்தின் பிலோலா நகரத்துக்கு திரும்பவுள்ளனர்.
அவர்கள் சட்டபூர்வமாக சமூகத்தில் வசிப்பார்கள் என புதிய இடைக்கால உள்துறை அமைச்சர் சால்மெர் ( Jim Chalmers) தெரிவித்துள்ளார்.
Speaking with the Murugappan family about my decision today as interim Home Affairs Minister to enable them to return #HometoBilo, the big-hearted QLD town which has embraced them so warmly #auspol pic.twitter.com/uw6vlZV2co
— Jim Chalmers MP (@JEChalmers) May 27, 2022
அத்துடன் நான் அந்த குடும்பத்துடன் உரையாடியுள்ளதாக கூறிய அவர், அவர்களின் பயோலா வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்தியதாகவும் கூறினார்.
அதேவேளை அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரான அந்தனி அல்பானீசும் (Anthony Albanese) இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
When I visited Biloela in 2019, I saw just how much the community loves Priya, Nades, Kopika and Tharnicaa. Today my Government has enabled them to return home. #HometoBilo pic.twitter.com/PqYa59d1rD
— Anthony Albanese (@AlboMP) May 27, 2022
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்ள்நாட்டு போர காரணமாக புகலிடக் கோரிக்கையுடன் நடேஸ் - பிரியா தம்பதிகள் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்த நிலையில் அவர்களின் இரு மகள்களும் அங்கேயே பிறந்திருந்தனர்.
நீண்டகாலமாக அவர்களுக்கு புகலிட கோரிக்கை மறுக்கப்பட்டிருந்த நிலையில் , அவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நுழைவிசைவு அனுமதி, கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களின் நீண்டநாள் காத்திருப்பி பின்னர் இந்த மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அதேவேளை இதனை என்னால் நம்பமுடியவில்லை என பிரியா முருகப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியாவிற்கு வரும் ஒவ்வொரு அகதியின் வாழ்க்கையும் அரசாங்கம் மாற்றவேண்டும் என்பதே எனது பிரார்த்தனை எனவும் பிரியா கூறியுள்ளார்.