தமிழர் பகுதியொன்றில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை உட்புக்குந்த காட்டு யானையால் அந்த பகுதியின் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் புகுந்த யானை தாக்கியதில் 75 வயது மதிக்கத்தக்க அக்கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

காட்டு யானைகளின் தொல்லை தற்போது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் வியாபித்துள்ளது. இன்று வரை மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.