திருமணமாகி முதலிரவிலேயே விவாகரத்து செய்த மணமகள் ; காரணத்தால் அதிர்ச்சியில் குடும்பம்
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், திருமணமான சில மணிநேரங்களிலேயே மணமகள் மணமகனுடன் வாழ மறுத்ததால், ஒரு திருமணம் உடனடியாக முடிவுக்கு வந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மணமகள் மிதிலேஷ் குமாரி, திருமண சடங்குகள் முடிந்து புகுந்த வீட்டிற்கு சென்ற முதல் இரவிலேயே, தனது கணவர் தரம் சிங் குஷ்வாஹாவுடன் வாழ மறுப்பு தெரிவித்தார்.

விவாகரத்து
தான் வேறொருவரை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக இந்த திருமணத்தை செய்து வைத்ததாகவும் மணப்பெண் குற்றம் சாட்டினார்.
இதனால் இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டு, விவகாரம் ரத் பொலிஸ் நிலையத்தை எட்டியது. பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
"இதை முன்பே சொல்லியிருந்தால் இரு குடும்பங்களுக்கும் இந்த அவமானம் ஏற்பட்டிருக்காது" என மணமகன் வேதனை தெரிவித்தார்.
இறுதியில், இரு குடும்பத்தாரும் பேசி பரஸ்பர விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து மிதிலேஷ் தனது பெற்றோருடன் வீட்டிற்கு திரும்பினார்.