புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு நடந்த சோகம்
புத்தளம், நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்மிஸ்ஸர மத்திய கல்லூரியின் உயர்தர கணிதப் பிரிவு மாணவனான 18 வயதுடைய சவிது சிஹார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவயது முதலே மோட்டார் சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்ட சவிது, சமீபத்தில் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்.

விபத்து நடந்த அன்று, மோட்டார் சைக்கிளில் சென்றவாறே வீடியோ பதிவு செய்ய முயன்றபோது, நிலைதடுமாறி வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளார்.
மோதிய வேகத்தில் கம்பம் உடைந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
“அந்த மோட்டார் சைக்கிளுக்கு உயிர் இருந்தால் நான் அதை எவ்வளவு நேசித்தேன் என்று சொல்லும்” என அவர் அடிக்கடி கூறி வந்ததாக அவரது தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.