அர்ச்சுனாவின் உளநல மருத்துவ அறிக்கை ; வெளியான முழு விவரம்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் மருத்துவ அறிக்கை தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அவர் மனநல சிகிச்சை பெற்றதாகக் கூறப்படும் வைத்திய அறிக்கை சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு துப்பாக்கி போன்ற பாதுகாப்பு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, அவற்றை அவர் பொறுப்புடன் பயன்படுத்துவாரா என்ற கேள்விகள் சமூகத்தில் எழுந்துள்ளன.
இதனுடன், தையீட்டி விகாரை தொடர்பான பிரச்சினையில் அர்ச்சுனா ராமநாதன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து அவர் குரல் கொடுத்து வரும் நிலையில், மறுபுறம் சிங்கள ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும் போது சிங்கள மக்கள் அல்லது சிங்கள அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இவ்வாறு மாறுபட்ட நிலைப்பாடுகளில் அவர் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் சூழலில், அவருக்கு பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவது பாதுகாப்பானதா என்ற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான விளக்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணெளியை இங்கு காணலாம்......