குளிக்க சென்ற இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அவர்கள் நீராட சென்றுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் , காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.