LPL இறுதிப் போட்டியில் அதிரடி வெற்றி ; கிண்ணத்தை தட்டிச் சென்ற கோல் கெலன்ட்ஸ்
2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஜப்னா கிங்ஸ் அணிக்கு கோல் கெலன்ட்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக அந்த அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதையடுத்து 124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே வெற்றியை நோக்கி முன்னேறியது.
அந்த அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கைக் கடந்தது.
இதன் மூலம் ஜப்னா கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, 2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கியுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்து LPL கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.