பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் சகா அதிரடி கைது ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகக் கூறப்படும் பாணந்துறையைச் சேர்ந்த சலிந்து என்பவரின் உதவியாளர் ஒருவர், களுத்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் பாணந்துறை அருக்கோடையைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல்
களுத்துறை ரஜவத்தையில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது, ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 513 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நவீன மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.