பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி அநுர
புது டெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியிருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களையும் இன்று சந்தித்தார்.
குறித்த மாநாட்டின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனையும் ஜனாதிபதி சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். பிரான்ஸ்க்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டையும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இருதரப்பு கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று (19) பிற்பகல் நடைபெற்றது.

பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடன் ஜனாதிபதி திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடலையும் நடத்தினார்.
ஒரே வீட்டில் 6 ஆண்டுகளாக குடித்தனம் ; இறுதியில் திருநங்கைக்கு காதலன் நடத்திய பயங்கரம், வெளியான பகீர் பின்னணி
இந்தப் பேச்சுவார்த்தைகள் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.
கூடுதலாக, ஜனாதிபதி அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார்.