900 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி ; உயரதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கையிலுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் 1,000க்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து சுமார் 900 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்தாவது சந்தேக நபரான அந்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் இன்று (19) உத்தரவிட்டார்.
தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல சந்தேக நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரகசிய வாக்குமூலம்
இந்த வழக்கில் ஏற்கனவே பிணையில் உள்ள எட்டாவது சந்தேக நபரான மற்றொரு முன்னாள் பணிப்பாளர், நீதவான் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை பணிப்பாளர்கள் உட்பட 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
மோசடி செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தச் சொத்துக்களைத் தடை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு காவல்துறை கோரியுள்ளனர். இது குறித்த கட்டளை நாளை (20) வழங்கப்படும் என நீதவான் அறிவித்தார்