கண்ணீரை வரவழைக்கும் முன்னாள் பெண்போராளியின் இன்றைய நிலை!
வன்னி பெருநிலப்பரப்பில் இன்னும் யுத்தத்தின் வடுகள் மாறாது மக்களின் வாழ்க்கை வலிகள் நிறைந்ததாகவே இருக்கின்றது. அங்குள்ள மக்கள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
இன்னும்கூட அங்கு செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதிகள் பெரும்பாலான கிராமங்களில் இல்லாமலே உள்ளது. இந்நிலையில் முத்தையன் கட்டு பகுதியில் வாழும் முன்னாள் பெண் போராளி கடும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.
கணவர் எங்கே என தெரியாது தவிக்கும் அவர் ,தனது மகனுடன் கூலி வேலைக்கு சென்று தனது வாழ்க்கையை கொண்டு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் எமது உறவுப்பாலம் நிகழ்ச்சி ஊடாக அவர்களின் வாழ்வில் சிறிதளவேனும் முன்னேற்றங்களை கொண்டு வரும்.