தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகர் பிரதமர்; பெரமுனவின் முன்னாள் எம்பி சினம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய தமிழ் புலம் பெயர் அமைப்புக்களின் இடைத்தரகராக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் விசனம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலம் கடந்துள்ளது.

எங்களை கேட்டா யுத்தம் செய்தார் ..
இத்தகைய பின்னணியில் அரசாங்க தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுள்ளன. வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் எங்களை கேட்டா யுத்தம் செய்தார்கள் என்கின்றார்.
நாம் தமிழ் இனத்திற்கு எதிராக யுத்தம் செய்யவில்லை . மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்தோம்.ஆனால் பிரதமரின் கருத்து யுத்தம் செய்த இளைஞர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கொள்கையை விதைக்கும் விடயத்தையே பிரதமர் முன்னெடுத்து வருகின்றார்.
அந்த வகையில் புலம் பெயர் அமைப்புக்களின் தரகராகவே பிரதமர் உள்ளார்.அதேபோல் அரசாங்கம் இயலாமையை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை எனவும் ர் சமன் பிரிய ஹேரத் தெரிவித்துள்ளார்.