டைட்டானிக் கப்பல்; ஜெப்ரி எப்ஸ்டீனுடன் காதல் செய்யும் ட்ரம்ப்; கேலி செய்யும் சிலைகள் !
அமெரிக்காவின், வொஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கேலி செய்யும் சிலைகள் மற்றும் கலைப்படைப்புகளை நிறுவி வரும் பெயரிடப்படாத கலைஞர்கள் குழு, செய்த சிலை இணையங்களில் வைரலாகியுள்ளது.
நேற்று(10) காலை 'நேஷனல் மால்' (National Mall) பகுதியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட சிலையை நிறுவியுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

டைட்டானிக் திரைப்படத்தின் புகழ்பெற்ற ஒரு காட்சி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் "டைட்டானிக்" திரைப்படத்தின் புகழ்பெற்ற ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சிலைக்கும் தலைநகருக்கும் இடையே 10 தனித்தனி பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ட்ரம்பும் எப்ஸ்டீனும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சிலை சமூக வலைத்தளத்தில் பலரின் கேலுக்கு உள்ளாகியுள்ள அதேவேளை , சிலர் பாராட்ட்டையும் கூறி வருகின்றனர்.