மரணித்தாலும் அரக்கனாக வந்தாவது பாதுகாப்போம் ; கஸ்ஸப தேரர் சினம்
எங்கள் பிணங்களின் மீது தான் அநுராதபுர புனித பூமியை இந்தியாவுக்குக் கொடுக்க முடியும்.அப்படி நாங்கள் மரணித்தாலும் அரக்கனாக வந்தாவது அல்லது தெய்வமாக வந்தாவது இந்த புனித பூமியைப் பாதுகாப்போம் என கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் கஸ்ஸப தேரல் உட்பட மூன்று தேரர்கள் இன்று சத்தியாகிரகத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

எங்களை அடித்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம்
அநுராதபுர புனித பூமி அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்படவும், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வலியுறுத்தும் வகையில்,இந்த சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? மகாநாயக்க தேரர்கள் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க கோரிக்கை விடுக்கவில்லை என்று சொல்கிறார்.
மேலும் செல்லும் இடமெல்லாம் பொலிஸார் எங்களை அடிக்கிறார்கள். புத்த பெருமானின் இந்த பூமியிலும் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால், அவ்வாறு அடி வாங்கிச் சாக அவசியமில்லை. மீண்டும் எங்களை அடித்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம்.
ஆனால் புத்த பெருமானின் சீடர்களாகிய நாங்கள் கையை தூக்க மாட்டோம். ருவன்வெலிசாயவுக்கு வந்து எனது உயிரைப் பூஜிக்கிறேன் என்று வணங்கிவிட்டுச் செல்வது அல்ல அது.
புத்த பெருமானின் சீடர்கள் வெற்றி பெறுகிறார்களா அல்லது அதற்கு எதிரான ஆட்சியாளர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பதை பௌத்த மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
முழு உலகமும் புத்த பெருமானுக்கு எதிராக அநுராதபுர புனித பூமியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஆதரவாக நின்றால், பௌத்த துறவிகளாகிய நாங்கள் மூவர் இருக்கிறோம்.நாங்கள் மூவரும் இறக்கும் வரை எங்களை புத்த பெருமானுக்கு பூஜை ஆக்குகிறோம்.