திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷா போட்டியா!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடிகை த்ரிஷா திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியில் இருக்கும் தேவாலயங்களில் திரிஷாவுக்கு வாக்கு சேகரிக்கும் ரகசிய பணிகளும் தொடங்கிவிட்டதாக பேச்சுகள் அடிபடுகிறது.

நவம்பர் மாத இறுதியில் இடைத்தேர்தல்
நவம்பர் மாத இறுதியில் திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைமை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேசமயம் முதலமைச்சர் விஜய் உடன் நடிகை த்ரிஷா விழாக்களுக்கு சென்று வருகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில் , தற்போது தவெக சார்பில் நடிகை த்ரிஷா திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.