கொழும்பில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம மைதானத்தை அண்மித்த பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை பகுதிகளைச் சூழவுள்ள பல வீதிகளிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கு அதிக கனமழை
அதேவேளை நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கு அதிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கு அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது