இரகசிய தகவலால் கிடைத்த அதிர்ச்சி தரும் பொருள் ; தமிழர் பகுதியில் சிக்கிய நபர்
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து டைனமைட் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவர் மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது டைனமைட் வெடி பொருளுக்கு பயன்படுத்தபடும் டெட்டனேட்டர் குச்சிகள் 23 ,வெடிபொருள் மருந்து, ஈயத் துண்டுகள், வயர்,நாட்டுத் துப்பாக்கி குழல் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 38 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிபொருட்கள்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது மேற்படி வெடிபொருட்களுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் , இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.