யாழில் புத்தாண்டு தினத்தில் அரங்கேறிய பயங்கரம் ; சிக்கிய கொலையாளி
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் நேற்றையதினம் கத்திக்குத்துக்கு இலக்காகி பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருடைய கணவராான 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து சம்பவம்
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருடைய கணவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்டவர் மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு ; எதிர்கட்சி உறுப்பினருக்கு வீடு தேடிச் சென்று கொழும்பு மேயர் செய்த செயல்
கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையே இவ்வாறு மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.