திருமணத்திற்கு மறுத்த காதலன்; புத்தாண்டு விருந்துக்கு அழைத்து பெண் அரங்கேற்றிய சம்பவம்!
திருமணத்திற்கு மறுத்த காதலனை புத்தாண்டு விருந்துக்கு விருந்து அழைத்த, காதலனின் மர்ம உறுப்பை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மும்பை, சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,

மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு
பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார்.
எனினும் , ஒவ்வொரு முறையும் அந்த நபர் சக்குபோக்கு கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு , பெண் அழைப்பு விடுத்துள்ளார்.
அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்தபோது காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் , ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்த நபர், பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை பொலிஸார், அந்த பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.