வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு ; எதிர்கட்சி உறுப்பினருக்கு வீடு தேடிச் சென்று கொழும்பு மேயர் செய்த செயல்
கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஷொஹாரா புகாரியின் வீட்டுக்குத் தேடிச் சென்ற கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலி பல்தசார் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் பெண் உறுப்பினர் ஷொஹாரா புகாரி வாக்களித்தமைக்காக அவரது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத்திட்டம்
கொழும்பு மாநகர சபையில் இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு எவ்வித இணக்கப்பாடுகளும் அற்ற நிலையில் மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கத் தீர்மானித்தே எனது வாக்கை ஆதரவாக அளித்தேன் எனக்கு யாரும் அழுத்தங்கள்,கோரிக்கைகள் எதுவும் விடுக்கவில்லை.

எனது சுய விருப்பின் பேரிலேயே வாக்கைப் பயன்படுத்தினேன் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சொஹரா புஹாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.