கனடாவில் நடந்த வன்முறை கொள்ளை ; இலங்கைத் தமிழ் இளைஞன் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி
கனடாவில் மோதலில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு சென்ற புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த கதி ; கொழும்பில் முறைப்பாடு
ரொரன்ரோவிலுள்ள ஹோட்டலில் நடந்த வன்முறைத் தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில், பே ஸ்ட்ரீட் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் வருகை தரும் முன்னர், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
எனினும் தேடுதலின் பின்னர் இலங்கையை சேர்ந்த 30 வயதான பிரவீன் ஜெகதீஸ்வரன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் ஒன்றினை அறை ஒன்றை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.