யாழ். புங்குடுதீவு கடலில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்பகுதியில் கடற்தொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் நேற்று சனிக்கிழமை (06) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

மீட்பு நடவடிக்கை
அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு , கடற்தொழிலாளர்களை கண்டு மீட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞனின் வாழ்வை மாற்றிய சம்பவம் ; சகோதரர்களின் மரணத்தால் தவிக்கும் குடும்பம்
மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு , அவர்களது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.
குறித்த மீட்பு நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.