வல்வெட்டித்துறையில் குண்டுகள் ;நாடு கடத்தப்பட்ட மூவர் விமான நிலையத்தில் கைது
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் இன்று (29)கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான மூவரும் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

வல்வெட்டித்துறை குண்டுகள்
அவர்கள் படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மூவருக்கும் எதிராக நீதிமன்றில் பல வழக்குகள் தொடரப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் வைத்து குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கும் கைதான மூவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.