அச்சுறுத்தும் டெல்டா ; அடுத்த இருவாரங்கள் தீர்க்கமானது
இலங்கையில் டெல்டா கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதென பேராசிரியர், வைத்தியர் சந்திம ஜீவன்திம தெரிவித்துள்ளார்.
அதோடு தற்போது தான் இலங்கையில் டெல்டா தொற்று ஆரம்பமாகியுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் கொடூர தன்மை எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கது. வூஹான் மாறுபாட்டை விடவும் இரண்டு மடங்கு இது பரவும் என்றும் கூறிய அவர் , 5 நொடிகளேனும் முகக் கவசத்தை அகற்றினால் அந்த காலப்பகுதியில் தொற்றாளர்களாகுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.