காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது கல்லூரி மாணவன்
இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்தி தாக்கிய 20 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே கல்லூரியில் படிக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜிக் முகமது (20) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே ராஜிக் முகமதுவிடம் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளனர்.
இதனால் மாணவி இளைஞனிடம் பழகுவதை நிறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி முடித்து, ஆலந்தூர் ரெயில்வே நிலையம் சாலை வழியாக அந்தபெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த இளைஞன் , மீண்டும் தன்னிடம் பழகுமாறு கூறி வற்புறுத்தி தாக்கியதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின்பேரில் பரங்கிமலை பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ததினை தொடர்ந்து குறித்த இளைஞனை கைது பொலிஸார் செய்துள்ளனர்.