இந்த ஆண்டு உலக பணக்காரர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உலகின் தொழில்நுட்ப உலகின் மாபெரும் பணக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பணக்காரர்கள் இந்த ஆண்டு கிட்டத்தட்ட பாதி டிரில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg), பில் கேட்ஸ் (Bill Gates), லாரி எலிசன் (Larry Ellison) உள்ளிட்ட 20 பணக்காரர்கள் 480 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளை இழந்துள்ளதாக Bloomberg Billionaires குறியீடு காட்டுகிறது.
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களிள் வருவாய் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக உள்ள நிலையில், பொருளியல் மந்தநிலை குறித்த அச்சம் தலைதூக்கியுள்ளது.
அது நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பைக் குறையச் செய்ததுடன் பணக்காரர்களின் சொத்து மதிப்பையும் பாதித்துள்ளது.
Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸக்கர்பர்க்கின் மொத்தச் சொத்து மதிப்பு இவ்வாண்டு 87 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
அவர் தற்போது உலகின் ஆகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் 28ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் அவர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்திருந்தார்.
உலகின் ஆகப்பெரிய செல்வந்தரான இலோன் மஸ்க், Amazon.com நிறுவனரான ஜெஃப் பேஸோஸ் (Jeff Bezos) ஒவ்வொருவரும் 58 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து இழப்பைச் சந்தித்துள்ளனர்.
கிருமிப்பரவல் சூழலின் தொடக்கத்தில் வளர்ச்சியைக் கொண்டாடிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது பணவீக்கம், அதிகரிக்கும் வட்டி விகிதம் போன்ற அம்சங்களால் சிரமத்துக்குள்ளாகியுள்ளன.