வெறும் வயிற்றில் தினமும் சோம்பு நீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மை என்ன தெரியுமா?
தினமும் வெறும் வயிற்றில் சோம்பு என்னும் பெருஞ்சீரக நீரை குடித்து வந்தால், மிக அற்புத பலன் தரும் பெருஞ்சீரகம் பற்றி நாம் இங்கு பார்போம்.
எடை குறைவது முதல் கண் பார்வை கூர்மையடைவது வரை இதில் நிரம்பியுள்ள நன்மைகள் ஏராளம். மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு என்னும் பெருஞ்சீரகம், கை வைத்தியத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு பொருள்.
கண் பார்வைக் கூர்மை
சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கண்களின் பலவீனம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. சோம்பிற்கு நேத்திர ஜோதி என்ற பெயரும் உண்டு. சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண் பர்வை கூர்மைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள்
வயிற்று உப்புசத்தைத் தணிக்கும் சோம்பு, பல்வேறு வகையான செரிமான பிரச்சினைகளையும் சீர் செய்கிறது. வாயுத்தொல்லை, வயிற்று வலி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். வயிற்று தசைகளை தளத்தும் ஆற்றலும் சோம்பிற்கு உண்டு.
உடல் பருமனை குரைக்கும்
வெறும் வயிற்றில் சோம்புத் நீரை குடித்தால், உடல் எடையை சீராக இருக்கும். கொழிப்பௌ எரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பதால், உடல் பருமன் குறையும்.
சுவாச நோய்களுக்கு மருந்தாகும்
சுவாசக் குழாயில் வீக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு சோம்பு நீரை உட்கொள்வது நிவாரணம் தரும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும்
வாய் துர்நாற்றத்தை போக்கும்
வாய் துர்நாற்றத்தை போக்குவதில் சோம்பு நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சோம்பு நீரை வாரம் இரு முறை குடித்து வந்தால் வாய் துர்நாற்றப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேபோல் சோம்பை வாயில் போட்டுக் கொண்டு தினமும் மெல்லுவதன் மூலம் வாய் துர்நாற்றம் நீங்கும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தில் தாமிரச் சத்து, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுச் சத்துக்கள் காணப்படுகின்றன. இவை சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை போக்க உதவுகிறது. சோம்பில் உள்ள வைட்டமின் சி சருமத்தை இளமையாக வைத்துக் கொள்வதோடு, சருமத்தில் உள்ள மாசு மருக்களை நீக்கும்.