ராகுவின் பெயர்ச்சியால் உச்சத்திற்கு செல்லும் ராசிகள் இவர்கள் தான் ; உங்க ராசி இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகவும், மிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும் ராகு பகவான் பார்க்கப்படுகிறார். ராகு பகவான் ஒரு ராசியைக் மற்றொரு ராசிக்கு மாற ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் தற்போது சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், வரும் ஆகஸ்ட் 2ம் திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு யோகமும், அதிர்ஷ்டமும் அடிக்கப் போகிறது.

அது எந்தெந்த ராசிகள்
மேஷம்: உங்களது தன்னம்பிக்கையும் தைரியமும் வழக்கத்தை விட அதிகரிக்கும். நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற புதிய பொறுப்புகள் தேடி வரும். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும் என்பதால் நிதிநிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும், உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பொங்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.
கன்னி: உங்களது பொருளாதார நிலை அதிரடியாக உயரும். தடைபட்ட பண வரவுகள் எளிதாக உங்களை வந்தடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வீடு, நிலம், நகை அல்லது புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும்.
தனுசு: வாழ்க்கையில் ஏற்படும் மாறுபட்ட அனுபவங்கள் மூலம் உங்களுக்குப் புதிய பக்குவம் உண்டாகும். மனதில் புதிய சிந்தனைகள் மற்றும் திட்டங்கள் உருவாகும். பூர்வீக சொத்துக்களைப் பழுதுபார்த்துச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் கல்வியில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்குக் கூடுதல் நற்பெயர் கிடைக்கும்.