நாடளாவிய ரீதியில் நடவடிக்கை ; வசமான பிடிபட்ட 2,36,280 சந்தேகநபர்கள்
முழு நாடுமே ஒன்றாக எனும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 236,280 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த வருடம் (2025) ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பு நடவடிக்கை
அதற்கமைய வியாழக்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகமைய, 688 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 688 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்டவிரோத சொத்துகுவிப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 4 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது,
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த ஒக்டோபர் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய அமைய இதுவரை 2 இலட்சத்து 36 ஆயிரத்து 280 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 236,897 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2253 கிலோ கிராம் ஹெரோயின், 2639 கிலோ கிராம் ஐஸ் , 7496 கிலோ கிராம் கஞ்சா, 291 கிலோ கிராம் கொக்கைன், 1637 கிலோ கிராம் குஷ், 351 கிலோ கிராம் ஹசிஸ், 865 கிலோ கிராம் மதனமோதகம், 440 கிலோ கிராம் மாவா மற்றும் 3,642,833போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை சட்டவிரோத சொத்துகுவிப்பு தொடர்பில் 376 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3267 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
மேலும் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2308 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.