ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி
இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணை
காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த இளம் பெண்ணுக்கு ஆண் பொலிஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான பொலிஸ் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான பொலிஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.