நடுவீதியில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை
பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியில் நாமல்பொகுண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மதுபோதையில் அலட்சியமான முறையில் வாகனத்தை செலுத்தியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.